சென்னை: ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கையில் திமுக ஆதரவு வேட்பாளர்கள் அதிகளவில் முன்னிலை பெற்றுவருகின்றனர். இதனிடையே, இந்த தேர்தலில் 169 விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டதாகவும் 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
140 மாவட்ட கவுன்சிலர், 1,381 ஒன்றிய கவுன்சிலர், 2,779 கிராம ஊராட்சித் தலைவர், 19,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வாக்குப்பதிவு கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று (அக். 12) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கை 1 மணி முன்னிலை நிலவரம்..