ETV Bharat / city

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஜூன்9ஆம் தேதி இந்து முறைப்படி திருமணம்! - இந்து முறைப்படி திருமணம்

நட்சத்திர ஜோடிகளாக நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே வருகிற 9ஆம் தேதி, இந்து முறைப்படி திருமணம் நடைபெறவுள்ளது.

விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்
author img

By

Published : Jun 7, 2022, 1:27 PM IST

சென்னை: தனக்கும் நடிகை நயன்தாராவுக்கும் வரும் (ஜூன்) 9ஆம் தேதி, இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் வருகிற 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.

இதனையொட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று (ஜூன் 7) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'ஒரு எழுத்தாளர் மற்றும் இயக்குனராக எனது திரைப்பயணத்தில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நான் இயக்கிய படங்கள் மற்றும் எழுதிய பாடல்கள் வரை எல்லாவற்றிற்கும் நீங்கள் உறுதுணையாக இருந்துள்ளீர்கள்.

இயக்குனர் விக்னேஷ் சிவன் செய்தியாளர் சந்திப்பு
தற்போது தனிப்பட்ட முறையில் அடுத்த கட்ட வாழ்வுக்கு செல்ல உள்ளேன். நானும் நடிகை நயன்தாராவும் நீண்ட காலமாக காதலித்து வந்தோம். இந்நிலையில் வரும் (ஜூன்) 9ஆம் தேதி எனக்கும் நயன்தாராவுக்கும் மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.

திருப்பதியில் திருமணம் செய்யலாம் என யோசித்தோம். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது. எங்களது திருமணம் இந்து முறைப்படி நடைபெற உள்ளது. ஜூன் 11ஆம் தேதி இருவரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்திக்கிறோம்” என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நேரில் பத்திரிகை வைத்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.