ETV Bharat / city

ஊரடங்கு விதிமீறல்: கொட்டும் துட்டும்... கோடிகளை எண்ணும் காவல் துறையும்! - lockdown updates in tamilnadu

சென்னை: ஊரடங்கை மீறுவோர் மீது தொடரும் வழக்குப்பதிவால் அபராதம் கொட்டோ கொட்டென கொட்டுவதால் இதுவரை 11 கோடியே 39 லட்சத்து 65 ஆயிரத்து 139 ரூபாய் வசூலாகியுள்ளது.

vehicles seized during lockdown in tamilnadu

author img

By

Published : Jun 10, 2020, 12:23 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவாமல் தடுக்கும்வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியில் வரக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறுபவர்களைக் கண்காணித்து தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. தடை உத்தரவை மீறும் இளைஞர்கள் மீது வழக்குகள் பதிவுசெய்து அவர்களைக் கட்டுப்படுத்திவருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வந்த 78 நாள்களில் தமிழ்நாடு காவல் துறை தடையை மீறியதாக ஆறு லட்சத்து 11 ஆயிரத்து 64 பேரைக் கைதுசெய்து பிணையில் விடுவித்துள்ளது.

நான்கு லட்சத்து 59 ஆயிரத்து 771 வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. 11 கோடியே 39 லட்சத்து 65 ஆயிரத்து 139 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 'இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது' - ஜெ. அன்பழகன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.