ETV Bharat / city

அண்ணாமலை, எல். முருகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டிஜிபியிடம் விசிக புகார் - அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விவகாரம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்துள்ளார்.

டிஜிபியிடம் விசிக புகார்
டிஜிபியிடம் விசிக புகார்
author img

By

Published : Apr 19, 2022, 11:31 AM IST

சென்னை: கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற விசிகவினருடன் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு டிஜிபி சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஏப்ரல் 14ஆம் தேதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துவது வழக்கம். அந்த அடிப்படையில் திருமாவளவன் தலைமையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது பாஜகவைச் சேர்ந்த சிலர் அந்த இடத்தில் பாரத் மாதா கி ஜெ, ஜெய் ஸ்ரீ ராம், வேல் வேல் வெற்றிவேல் என கோஷம் எழுப்பி பிரச்சனையை ஏற்படுத்தினர்.

திட்டமிட்டு வன்முறையை நடத்த வேண்டும், கலவரம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜகவைச் சேர்ந்த சிலர் அங்கு செயல்பட்டனர். வன்முறையின் மூலம் கட்சியை வளர்க்க வேண்டும் என முடிவெடுத்து நேர்மை இல்லாமல் தமிழ்நாடு பாஜக செயல்பட்டு வருகிறது. இதே போல் கோவையில் விமான நிலையத்திலும், பாஜகவினர் முழக்கங்களை எழுப்பி பிரச்சனையை கிளப்பி உள்ளனர்.

திட்டமிட்டு இந்த வேலையை தமிழ்நாடு முழுவதும் செய்து வருகிறது பாஜக. இதற்கு காரணமானவர்கள் மீது டிஜிபி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வன்முறையை ஏற்படுத்துபவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். இதனை காவல்துறைக்கு உணர்த்தும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபுவை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். அண்ணாமலை, எல். முருகனும் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டா போட்டி : பாஜக-விசிக வாக்குவாதம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.