ETV Bharat / city

வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா மீது பணம் மோசடி புகார்! - vanigar sangam head vikramraja

சென்னை: வணிகர் சங்க பேரவைத் தலைவர் விக்கிரமராஜா, 18 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக, சென்னை காவல் ஆணையரிடம் நெல்லை - தூத்துக்குடி நாடார் மகமை சங்கம் புகார் அளித்துள்ளது.

பணம் மோசடி புகார்
author img

By

Published : Jul 1, 2019, 4:52 PM IST

சென்னை எழும்பூரில் நெல்லை - தூத்துக்குடி நாடார் சங்கம் சுமார் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருகின்றனர். கொட்டிவாக்கத்தில் சங்கத்திற்கு சொந்தமாக நெல்லை நாடார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.

இப்பள்ளியின் தாளாளரான வணிகர் சங்க பேரவைத தலைவர் விக்கிரமராஜா, பள்ளி கணக்குகளுக்கு பொறுப்பு வகித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் முறையான கணக்கை விக்கிரமராஜா தாக்கல் செய்யாமல் முறைகேடாக ரூ.18 கோடி ரூபாய் பணத்தை கையாடல் செய்ததாக சங்க உறுப்பினர்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில், சங்கம் சார்பில் கமிட்டி கூட்டம் அமைத்து கையாடல் குற்றத்தைப் பற்றி விக்கிரமராஜாவிடம் கேட்டுள்ளனர், அந்த குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் இப்பள்ளியின் பெயரில் யாருக்கும் தெரியாமல் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி அதிலிருந்தும் கொள்ளையடித்து வருவதாக சங்கத்தினர் அடுக்கடுக்காக புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, விக்கிரமராஜா கையாடல் செய்த 18 கோடி ரூபாய், சங்கத்தின் 500 கோடி மதிப்புள்ள சொத்துகளையும் மீட்டு தரக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், சங்கத்தின் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புகார் தெரிவிக்கும் சங்கத்தினர்

Intro:Body:வணிகர் சங்க பேரவை தலைவர் விக்கிரமராஜா 18கோடி ரூபாய் கையாடல் செய்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை சங்கம் சார்பாக புகார்..

சென்னை எழும்பூரில் நெல்லை_தூத்துக்குடி நாடார் சங்கம் சுமார் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.இதில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். மேலும் சங்கத்திற்கு சொந்தமாக கொட்டிவாக்கத்தில் நெல்லை நாடார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது..இப்பள்ளியின் தாளாளராக விக்கிரமராஜா இருந்து வந்துள்ளார்.

மேலும் இப்பள்ளி மூலம் 2008ஆம் ஆண்டு முதல் செலவு போக 18கோடி ரூபாய் இருப்பு தொகையாக இருக்க வேண்டும். ஆனால் விக்கிரமராஜா முறையான கணக்கை தாக்கல் செய்யாமல் பணத்தை கையாடல் செய்ததாக தெரிய வந்துள்ளது.

பின்னர் கமிட்டி கூட்டத்தில் பணத்தை பற்றி கேட்டால் அப்படி ஒரு பணம் இல்லை என்று ஏமாற்றியதாக கூறினார்.
மேலும் இப்பள்ளியின் பெயரில் யாருக்கும் தெரியாமல் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி கொள்ளையடித்து வருகின்றனர்.

இதனால் விக்கிரமராஜா கையாடல் செய்த 18கோடி ரூபாயையும்,500கோடி மதிப்புள்ள சொத்துகளையும் மீட்டு தரக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சங்கத்தின் சார்பாக புகார் அளித்துள்ளார்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.