நாட்டின் பிரபல என்ஜின் ஆயில் மற்றும் ஆட்டோமொபைல் சேவைகள் நிறுவனமான வால்வோலின், தனது பெருநிறுவன சமூக பங்களிப்பின் (CSR) ஒரு பகுதியாக, நாட்டில் உள்ள மெக்கானிக்களுக்கு (வாகனம் பழுது பார்ப்பவர்களுக்கு) 'ஃபர்ஸ்ட் சுரக்ஷா'. எனும் திட்டத்தின் கீழ் உதவி வருகிறது.
அதன்படி, டெல்லி, மும்பை, லக்னோ, ஹைதராபாத், இந்தூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட சந்தைகளில் உள்ள மெக்கானிக்களுக்கு முகக் கவசம், சானிடைசர் உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கியுள்ளது. மேலும் கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு முடிவுக்கு வந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பும் நேரத்தில், மெக்கானிக்குகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துரைத்து வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 70 ஆயிரம் நபர்களுக்கு இந்தப் பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கியுள்ளதாகவும், தற்போது சென்னையிலுள்ள மெக்கானிக்களுக்கு உதவி வருவதாகவும் வால்வோலின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்தி பண மோசடி: இருவர் கைது