ETV Bharat / city

ஆர்டிஓ இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனை!

சென்னை: கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Income tax Ride To Rto Officer Home
author img

By

Published : Oct 6, 2019, 6:18 AM IST

திருவிழா நாட்களை முன்னிட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பரிசுப் பொருட்களை இடைத்தரகர்கள் வழங்குவதாக வந்த தகவலையடுத்து, கடந்த இரண்டு நாட்களாக அந்த அலுவலகங்களில் கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் தீவிர சோதனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ஏழு லட்சம் ரூபாய் பணம் பிடிபட்டுள்ளது. இதையடுத்து, கே.கே. நகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ்குமார் அலுவலகத்தில் நேற்று கையூட்டு ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் காட்டப்படாத பணம் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை

இதனைத் தொடர்ந்து இன்று வளசரவாக்கம், ராமாபுரம் வெங்கடேஸ்வரா ஆகிய நகர்களில் உள்ள சுரேஷ்குமாரின் வீட்டிலும் தீவிர சோதனை செய்துவருகின்றனர். முழு சோதனைக்குப் பிறகு எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என்பது தெரியவரும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சின்னசேலம் ஊராட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை!

Intro:கே.கே நகர் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.

Body:பண்டிகை நாட்களை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பரிசுப்பொருட்களை இடைதரகர்கள் தருவதாக வந்த தகவலையடுத்து கடந்த இரண்டு தினங்களாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ரூபாய் 7 லட்சம் கணக்கில் வராத பணம் பிடிபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கே.கே நகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறதுConclusion:இதனைத் தொடர்ந்து இன்று வளசரவாக்கம், ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றனர். முழு சோதனைக்கு பிறகு எவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டது என தெரியவரும் எனவும் அதன்பிறகு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.