ETV Bharat / city

'கிராமப்புற நலன் மீது உச்சநீதிமன்றத்திற்கு அக்கறை இல்லையா?' - கே. பாலகிருஷ்ணன் - Chennai Salem 8 line road project

"கிராமப்புற மக்களின் நலன்கள் மீது உச்சநீதிமன்றத்திற்கு அக்கறையில்லையோ?" என்று சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டம் வழக்கின் தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன்

author img

By

Published : Dec 8, 2020, 10:14 PM IST

தமிழ்நாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்தத் திட்டத்திற்காக சுமார் 7500 ஏக்கர் சாகுபடி நிலங்கள், வனத்துறையின் காப்புக்காட்டு நிலங்கள், நீர்நிலைகள், விவசாய கிணறுகள் என அனைத்தும் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி சாய்க்க வேண்டியுள்ளது. சில கிராமங்களில் வீடுகள் இடிபடுவதால் கிராமங்களே காலி செய்யும் நிலைமை உள்ளது.

எனவே, இந்த 8 வழிச் சாலை திட்டத்தை கைவிட வேண்டுமென பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இறுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இது தொடர்பாக 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பில், சுற்றுச் சூழல், வனத்துறை அனுமதி பெறாமல் நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஆணை வெளியிட்டது தவறு எனவும், அந்த அரசாணையை ரத்து செய்து, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உரியவர்களின் பெயரில் ஆவணங்களை மாற்றித் தர வேண்டுமென உத்தரவிட்டு, நிலங்களை கையகப்படுத்துவதற்கான உரிய சட்ட விதிகளை பின்பற்றி 8வழிச் சாலையை அமைக்கும் பணியை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பல வாதங்களை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

குறிப்பாக, ஏற்கனவே மூன்று சாலைகள் இருக்கும் போது நான்காவது சாலை அவசியமில்லை என்பதும், விவசாய நிலங்கள், நீராதாரங்கள், காடுகள், பாசன கிணறுகள், விவசாயிகளின் வீடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தீர்ப்பில் இடம்பெறாதது கிராமப்புற மக்களின் நலன்கள் மீது உச்சநீதிமன்றத்திற்கு அக்கறையில்லையோ என்ற கேள்வி எழுகிறது.

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளும், தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் சென்னை - சேலம் 8 வழிச் சாலை அமைக்கும் பணியினை தொடர வேண்டாமெனவும், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்கனவே உள்ள சாலைகளை அகலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும், கரோனா நெருக்கடியை சமாளிக்க வேண்டிய இந்த நேரத்தில் ரூ. 10,000 கோடி செலவில் புதிய சாலை அவசியமற்றது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.