ETV Bharat / city

மூதாட்டியை கத்தியால் தாக்கி நகைகள் திருட்டு - jewelry

பல்லாவரம் அருகே வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வரும் மூதாட்டியை கத்தியால் தாக்கி நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூதாட்டியை கத்தியால் தாக்கி நகைகள் திருட்டு

author img

By

Published : Sep 23, 2022, 8:10 AM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த மலைமோடு மாரியம்மன் கோவில் தெருவில் தனியாக வசித்து வருபவர் லட்சுமி (76) இவர் பல்லாவரம் பகுதி முழுவதும் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் படுக்கச் சென்ற லட்சுமி இன்று வெகு நேரம் ஆகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் கதவும் திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது தலை மற்றும் உடலில் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் மயக்கமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற பல்லாவரம் காவல்துறையினர் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் தீவிர சிகிச்சைகாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலில் மூதாட்டி காதில் அணிந்திருந்த கம்மல், மற்றும் விரலில் அணிந்து இருந்த மோதிரங்கள் என மூன்று சவரன் தங்க நகைகள் கழட்டி கொண்டு கத்தியால் வெட்டி விட்டு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: சினிமா ஆசைக்காட்டி ஆபாச படமெடுத்த இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.