ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 9 - ஊராட்சித் தலைவரின் பணிகள்

உள்ளாட்சி உங்களாட்சியின் கடந்த பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டம் குறித்து பார்த்தோம். இந்த பகுதியில் ஊராட்சித் தலைவரின் பணிகள் குறித்து பார்ப்போம்.

உள்ளாட்சி உங்களாட்சி
உள்ளாட்சி உங்களாட்சி
author img

By

Published : Dec 2, 2019, 7:32 PM IST

ஒரு ஊராட்சி நிர்வாகத்தில் நடைபெறும் அனைத்து செயல்பாடுகளுக்கும் அந்த ஊராட்சி தலைவரே பொறுப்பு. அரசுக்கும், ஊராட்சிக்குமிடையே அலுவல் ரீதியாக எந்தத் தொடர்பு நடைபெற்றாலும்; அது ஊராட்சித் தலைவர் மூலம் மட்டும் தான் நடக்க வேண்டும்.

கிராம சபை கூட்டங்களைக் கூட்டுவது, அதற்கு தலைமை ஏற்று நடத்துவது அவரது முக்கியப் பணிகள். ஊராட்சி நிர்வாகத்தில் தலைவருக்கே அதிகப்படியான அதிகாரங்களும், பொறுப்புகளும் உள்ளன. கிராம சபை மற்றும் ஊராட்சி மன்றத் தீர்மானங்கள் முலம் ஊராட்சித் தலைவர் எடுக்கும் முடிவுகளை ஊராட்சிச் செயலர் செயல்படுத்த வேண்டும்.

இருப்பினும், அவரால் அனைத்து முடிவுகளையும் தன்னிச்சையாக எடுத்திட முடியாது. கிராம சபையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் தான் அவர். ஊராட்சித் தலைவருக்கு மாத ஊதியம் என்று எதுவும் கிடையாது.

ஊராட்சித் தலைவர், சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறார் என மாவட்ட ஆட்சியர் கருதினால், ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் ஊராட்சித் தலைவரை தகுதி நீக்கம் செய்ய முடியும்.

தகுதி நீக்கம் செய்வதற்கு முன், மாவட்ட ஆட்சியரின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி மன்றக் கூட்டத்தினை வட்டாட்சியர் கூட்டி, துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்களின் முன், ஊராட்சித் தலைவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வாசித்து, அனைவரது கருத்தையும் பதிவு செய்து, அதை அறிக்கையாக மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:

உள்ளாட்சி உங்களாட்சி 8 - நூறு நாள் வேலைத் திட்டம்

Intro:Body:

Ullatchi Ungalatchi series 2

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.