ETV Bharat / city

உள்ளாட்சி உங்களாட்சி 12 - உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு - உள்ளாட்சி உங்களாட்சி

உள்ளாட்சி உங்களாட்சியின் கடந்த பாகத்தில் ஊராட்சி செயலரின் பணிகள் குறித்து பார்த்தோம். இந்தப் பாகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு குறித்துப் பார்ப்போம்.

உள்ளாட்சி உங்களாட்சி
உள்ளாட்சி உங்களாட்சி
author img

By

Published : Dec 9, 2019, 5:03 PM IST

ஒரு கிராம ஊராட்சியில் பல வார்டு உறுப்பினர்களும், துணைத் தலைவர் ஒருவரும், ஊராட்சித் தலைவர் ஒருவரும் இருப்பார்கள் என்பது ஏற்கனவே அறிந்தது.

கிராம ஊராட்சியில் உள்ள வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை அதன் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதாவது, 500 பேர் முதல் 2000 பேர் வரை இருக்கும் வார்டுக்கு ஆறு வார்டு உறுப்பினர்களும், 2001 பேர் முதல் 6000 பேர் வரை இருக்கும் வார்டுக்கு 9 வார்டு உறுப்பினர்களும், 6001 பேர் முதல் 10,000 பேர் வரை இருக்கும் வார்டுக்கு 12 வார்டு உறுப்பினர்களும், 10,000 பேருக்கு மேல் இருக்கும் வார்டுக்கு 15 வார்டு உறுப்பினர்களும் நியமிக்கப்படுவார்கள்.

அதுமட்டுமின்றி, மேற்கூறிய வார்டு உறுப்பினர்களுக்கான பதவிகளில் பட்டியலினத்தவர்களுக்கும் பெண்களுக்கும் இடங்கள் ஒதுக்கப்படும்.

பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு:

ஊராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில் பட்டியலின மக்கள் தொகைக்கு இணையான விழுக்காட்டில் அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். இதில் 50 விழுக்காட்டிற்கு குறையாத இடங்கள் பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு:

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான பதவியிடங்களில் 50 விழுக்காட்டிற்குக் குறையாத இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும். இதில் பட்டியலினப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் அடங்கும்.

உதாரணமாக, கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 5,000 ஆகவும், அவர்களில் பட்டியலினத்தவர் 2,000 பேரும் இருந்தால் 9 வார்டு உறுப்பினர்களில் 4 உறுப்பினர்களுக்கான இடத்தை பட்டியலினத்தவர்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த நான்கு உறுப்பினர்களில் இரண்டு பேர் பட்டியல் பிரிவு பெண்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர்களுக்கான பதவியிடங்கள் ஒதுக்கீடு:

வார்டு உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டது போலவே தலைவர்களுக்கான பதவியிடங்களும் மக்கள் தொகையின் அடிப்படையிலேயே ஒதுக்கப்படும். கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான பதவியிடங்கள் ஒன்றிய அளவிலான மக்கள் தொகை அடிப்படையிலும், ஒன்றிய மன்ற தலைவர்கள் மற்றும் மாவட்ட ஊராட்சித் தலைவர்களுக்கான பதவியிடங்கள் மாவட்ட அளவிலான மக்கள் தொகை அடிப்படையிலும் ஒதுக்கப்படுகிறது. இவற்றில் பட்டியல் பிரிவினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு, வார்டு உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட வழிமுறையிலேயே ஒதுக்கப்படும்.

Intro:Body:

ullatchi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.