ETV Bharat / city

கல்லூரிகளில் கட்டாயமாகிறது ஃபிட் இந்தியா திட்டம்! - பல்கலைக்கழக மானியக்குழு

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு ஃபிட் இந்தியா திட்டத்தில் உடற்கல்வி மற்றும் உடல் நலம் சார்ந்த பயிற்சி கட்டாயம் செயல்படுத்தினால் மட்டுமே தர மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

ugc-brings-fit-india-campaign-compulsory-in-all-colleges
பல்கலைக்கழக மானியக்குழு
author img

By

Published : Dec 15, 2019, 6:56 PM IST

ஃபிட் இந்தியா திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்திட திட்டங்களை வகுக்குமாறு கடந்த செப்டம்பர் மாதம் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி.) சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.

தற்போது அதுகுறித்து விதிமுறைகளை அளித்துள்ளது. அதன்படி, 'வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் தினம்தோறும் 1 மணி நேரம் மாணவர்களுக்கு கட்டாயம் உடல் மேம்பாட்டு வகுப்புகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்களுக்கு யோகா, சைக்கிளிங், நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அளிக்கலாம்.

ugc-brings-fit-india-campaign-compulsory-in-all-colleges
பல்கலைக்கழக மானியக்குழுவின் சுற்றறிக்கை

ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் பேராசிரியர் ஒருவரின் தலைமையில் ஃபிட்னஸ் கிளப் உருவாக்கி, மாதம்தோறும் ஃபிட் இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செயல்படுத்திட வேண்டும். வரும் ஜனவரி மாத முதல் வாரத்தில் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படவுள்ள விளையாட்டு சார்ந்த நிகழ்ச்சிகள் என்னென்ன என்பது குறித்த அட்டவணையை சமர்ப்பிக்க வேண்டும். ஃபிட் இந்தியா திட்டம் சார்ந்து யு.ஜி.சி. விதிமுறைகளை முறையாக பின்பற்றியுள்ளதா? என்பதை ஆராய்ந்த பின்னர் அந்த நிறுவனத்திற்கு தர மதிப்பீடு வழங்கப்படும்.

யூ.ஜி.சி. வகுத்துள்ள விதிமுறைகளின்படி இனி கல்லூரி, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உடற்பயிற்சிகள், விளையாட்டுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள் ஃபிட் இந்தியா திட்டம் சார்ந்து கடைப்பிடிக்கும் தினசரி மாதாந்திர நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை www.ugc.ac.in என்கிற இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: "சாம்பாருக்கு முக்கியம் ஆனியன்; பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீ-யூனியன்": நடிகர் சின்னி ஜெயந்த்!

Intro:பிட் இந்தியா திட்டத்தினை செயல்படுத்தினால் மட்டுமே
தர மதிப்பீட்டிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
மனித வள மேம்பாட்டுத்துறை அதிரடி உத்தரவுBody:பிட் இந்தியா திட்டத்தினை செயல்படுத்தினால் மட்டுமே
தர மதிப்பீட்டிற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
மனித வள மேம்பாட்டுத்துறை அதிரடி உத்தரவு

சென்னை,

உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர்களுக்கு பிட் இந்தியா திட்டத்தில் உடற்கல்வி மற்றும் உடல் நலம் சார்ந்த பயிற்சி கட்டாயம் செயல்படுத்தினால் மட்டுமே தரமதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய மனித மேம்பாட்டுத்துறையின் பல்கலைக் கழக மானியக்குழு அனைத்து உயர்கல்வி நிறுவனங்கங்கள் ம்றறும் பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், பிட் இந்தியா திட்டத்தை உயர்கல்வி நிறுவனங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்திட திட்டங்களை வகுக்குமாறு கடந்த செப்டம்பர் மாதம் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு யூ.ஜி.சி சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. தற்போது அது  குறித்து விதிமுறைகளை அளித்துள்ளது.
அதன்படி வரும் ஜனவரி மாதம் முதல் நாட்டில் உள்ள அனைத்து  கல்லூரிகள் ,பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட  அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் தினம்தோறும்   1 மணி நேரம் மாணவர்களுக்கு கட்டாயம் உடல் மேம்பாட்டு  வகுப்புகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உள் மற்றும் வெளி இடங்களில் உடற்கல்வி பயிற்சியை அளிக்கலாம். யோகா, சைக்கிளிங், நீச்சல் உள்ளிட்ட உடற்பயிற்சிகளை அளிக்கலாம்.

  ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும்    பேராசிரியர் ஒருவரின் தலைமையில் பிட்னஸ் கிளப்  உருவாக்க வேண்டும் .  மாதம்தோறும் பிட் இந்தியா திட்டம் குறித்த  விழிப்புணர்வுக்காக உருவாக்கப்படும்  கருப்பொருள் சார்ந்த நிகழ்சிகளை ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் செயல்படுத்திட வேண்டும்.
 
அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும்  ஆண்டுதோறும் கட்டாயம் விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும். வரும்  ஜனவரி மாத  முதல் வாரத்தில் உயர்கல்வி நிறுவனங்களில்  மேற்கொள்ளப்பட உள்ள  விளையாட்டுச்  சார்ந்த நிகழ்ச்சிகள் என்னென்ன என்பது குறித்த அட்டவனையை சமர்ப்பிக்க வேண்டும்.

உயர் கல்வி நிறுவனம் பிட் இந்தியா திட்டம் சார்ந்து யு.ஜி.சி விதிமுறைகளை  முறையாக  பின்பற்றியுள்ளதா? என்பதை ஆராய்ந்த பின்னர் அந்த உயர் கல்வி  நிறுவனத்திற்கு தர மதிப்பீடு வழங்கப்படும்.

யூ.ஜி.சி வகுத்துள்ள விதிமுறைகளின்படி இனி கல்லூரி பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உடற்பயிற்சிகள் ,விளையாட்டுக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 
நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள் பிட்  இந்தியா திட்டம் சார்ந்து கடைப்பிடிக்கும் தினசரி மாதாந்திர  நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை www.ugc.ac.in என்கிற இணைய பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
நாட்டில் உள்ள இளைஞர்கள் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பிட் இந்தியா திட்டம் செயல்படுத்தபடுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.