சென்னை:நெஞ்சுக்கு நீதி படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் உதயநிதி ஸ்டாலின், போனி கபூர், இயக்குனர் அருண் ராஜா காமராஜ், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜூனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அருண் ராஜா காமராஜ் பேசுகையில், இது எனக்கு இரண்டாவது படம். உதயநிதியுடன் முதல்படம். அனைவருக்கும் நன்றி எனக் கூறினார்.
பின்னர் பேசிய ஆரி அர்ஜூனன் இது உண்மையான வெற்றி. இப்படம் ஒரு நூலகம் போன்றது. இன்று அனைத்து தயாரிப்பாளர்களையும் பாதுகாக்கும் நிறுவனமாக ரெட் ஜெயண்ட் உள்ளது. என்னை நம்பி இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்காக நன்றி எனத் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின்:கடந்த முறை பேசும்போது மாமன்னன் தான் உங்களுக்கு கடைசி படம் என்று கேட்டார்கள். மாமன்னன் படத்திற்கு பிறகு ஒருபடம் நடிக்கிறேன். அதனை அருண் ராஜா காமராஜ் தான் இயக்குவார் என்று நினைக்கிறேன். போனிகபூர் சார் இந்த படத்தை எனது நிறுவனத்தில் எடுத்துக்கொள்கிறேன் என்று பேசினார்.
கார்கி படம் பார்த்தேன். மிகவும் அருமையான படம். இயக்குநர் புதுமுகமாக இருந்தாலும் நன்றாக இயக்கியுள்ளார். இதுபோன்ற படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க:தமிழ் சினிமாவில் "சாதி படங்கள் வருவது வேதனை அளிக்கிறது" - நடிகர் ரஞ்சித்