தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை தொடங்கி அமைதியான முறையில் நடந்துவருகிறது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ. கஸ்ஸாலியை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிபெற்றார்.
பெரும்பாலான தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து, வெற்றிபெற்ற திமுக இளைஞரணிச் செலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிச் சான்றிதழுடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.