சென்னை அடுத்த அம்பத்தூர் அருகே ஒரகடம் செல்லும் சாலையில், உயர்ரக இரு சக்கர வாகனம் ஒன்றை இளைஞர் ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது முன்னே சென்ற ஆட்டோவை பார்த்ததும் வேகமாக கடக்க முயற்சி செய்யும் போது, எதிர்பாராதவிதமாக அந்த ஆட்டோவின் பக்கவாட்டில் இளைஞரின் இருசக்கர வாகனம் உரசியதில் சட்டென்று நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இவை அனைத்தையும் வீடியோவாக ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அதில் இளைஞர் வேகமாக வருவதும், ஆட்டோ மீது உராய்ந்து தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆர்ஏ புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து தீக்குளித்தவர் உயிரிழப்பு