ETV Bharat / city

தீவிர குற்றங்களை தடுக்க சென்னை காவல் துறையில் புதுப் பிரிவு உருவாக்கம் - சென்னை காவல் துறையில் புதுப் பிரிவு உருவாக்கம்

சென்னை கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 54 பேர் கொண்ட இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை காவல் துறை
சென்னை காவல் துறை
author img

By

Published : Dec 30, 2021, 12:18 AM IST

தீவிர குற்றவாளிகளின் நடவடிக்கையை கண்காணிப்பதற்கும், சட்ட விரோதமான செயல்களை தடுப்பதற்கும் இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்படும் என சட்டசபையில் தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் தீவிர குற்றங்கள் புரியும் A+,A,B,C என பிரிக்கப்பட்ட ரவுடிகளை கண்காணிப்பதற்கு இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்க கடந்த நவம்பர் மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் சென்னை கூடுதல் ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய அதிகாரிகளின் கீழ் இரண்டு உதவி ஆணையர்கள் தலைமையில் 54 பேர் கொண்ட இரண்டு தீவிர குற்றங்களை தடுக்கும் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பிரிவில் இரண்டு உதவி ஆணையர்கள், 4 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் 12, கிரேட் 1 காவலர்கள் 20, கிரேட் 2 காவலர்கள் என மொத்தம் 54 பேர் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த தடுப்பு பிரிவு செயல்பட துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: Double Role DMK: 'பாஜகவுக்கு மறைவுக ஆதரவளித்து இரட்டை வேடமிடும் திமுக' - ஜெயக்குமார் சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.