சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகளிலும் சனிக்கிழமை (செப்.25) வரை அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்களின் வாயிலாக 32 லட்சத்து 70 ஆயிரத்து 822 முதல் தவணை தடுப்பூசிகள், 16 லட்சத்து 86 ஆயிரத்து 550 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 49 லட்சத்து 57 ஆயிரத்து 372 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், தனியார் மருத்துவமனைகளின் வாயிலாக 7 லட்சத்து 71ஆயிரத்து 153 முதல் தவணை தடுப்பூசிகள், 2 லட்சத்து 72 ஆயிரத்து 232 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என 10 லட்சத்து 43 ஆயிரத்து 385 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தடுப்பூசி செலுத்திய மக்கள்
சென்னையில் செப்.25ஆம் தேதி வரை அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளின் சார்பில் மொத்தம் 60 லட்சத்து 757 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நேற்று (செப்.26) நடைபெற்ற ஆயிரத்து 600 தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 763 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்ற நிலையில், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படிங்க: ”பூஸ்டர் தடுப்பூசி - தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்”