சென்னை: கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், தின்பண்டம் வாங்க கடைக்குச் சென்ற 11 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த 64 வயதான முருகன் என்பவர் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டம் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு சென்னை போக்சோ சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம். ராஜலட்சுமி முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்துள்ள தீர்ப்பில், முருகனுக்கு போக்சோ சட்டப்பிரிவில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், இந்திய தண்டனை சட்டப் பிரிவில் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இந்த சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை சிறுமி பாலியல் வழக்கு... 8 பேருக்கு ஆயுள்... 13 பேருக்கு 20 ஆண்டு கடுங்காவல்...