சென்னை: கரோனா நிவாரணப் பொருள்களை பயனாளர்களுக்கு விநியோகிக்க உதவும் வகையில், டிவிஎஸ் நிறுவனம் அரசுக்கு 10 வாகனங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், இந்த வாகனங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதன் மூலம், மொத்தம் 10 வாகனங்களில் 18 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் பயனாளர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
பிராணவாயு கருவிகள், முகக் கவசங்கள், சானிடைசர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், கையுறைகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டாண்லி மருத்துவமனைகளுக்கு இந்தப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.