சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாவதாகத் தேர்வு எழுதும் மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வில் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதிமுதல் 17ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
இந்த நிலையில் நாளை (பிப்ரவரி 14) நடைபெற இருந்த தேர்வுக்குரிய வினாத்தாள்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அரசு தேர்வுத் துறை மூலம் வினாத்தாள்கள் அச்சிடப்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டன.
இந்நிலையில் ஒரு சில பள்ளிகள் மூலம் முன்கூட்டியே வினாத்தாள் வெளியாவதால், ஒட்டுமொத்தமாக அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானது குறித்து, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ள கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத் துறை இயக்குநர் சேதுராம வர்மா உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நீட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அதிமுக - முத்தரசன்