ETV Bharat / city

'செவிலி மரணத்தில் குழப்பம்; அரசின் அலட்சியம்' - டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை: பணிக்காலம் முடிந்த பிறகும் கரோனா களத்தில் பணிபுரிந்து உயிரிழந்த செவிலிக்கு பழனிசாமி அரசு செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

dinakaran
dinakaran
author img

By

Published : May 29, 2020, 2:56 PM IST

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தடுப்புப்பணியில் ஈடுபட்டிருந்த சென்னை அரசு மருத்துவமனை தலைமைச் செவிலியின் மரணம் குறித்து வெளியாகும் தகவல்களும், அதற்கு அளிக்கப்படும் விளக்கமும் கரோனா நோய்த்தடுப்பில் அரசு நிர்வாகம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது என்பதற்குச் சாட்சியாக இருக்கிறது.

திறனற்ற இந்த ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை எங்கே கொண்டு நிறுத்தப் போகிறார்களோ என்ற கவலையையும் மக்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமைச் செவிலியாகப் பணியாற்றிவந்த ஜோன் மேரி பிரிசில்லா கரோனா தொற்றால் உயிரிழந்ததாக முதலில் தகவல் வெளியானது. அதன்பிறகு என்ன நடந்ததோ, அவர் கரோனா பாதிப்பால் இறக்கவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்தது.

பிரிசில்லாவின் மருத்துவ அறிக்கையில், கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக குறிக்கப்பட்டிருந்ததை அவரது சகோதரர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அதற்கு, ’யாராவது தவறாக எழுதியிருப்பார்கள்’ என்றொரு அலட்சியமான பதிலை மருத்துவமனை நிர்வாகம் அளித்திருக்கிறது.

இது எவ்வளவு பெரிய துயரம், தலைமைச் செவிலிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நோயாளிகளின் கதி என்ன? கரோனா தடுப்புப் பணியில் உயிரிழந்தால், இழப்பீடு அளிக்க வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றிக் கூறப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இது உண்மை எனில், பணிக்காலம் முடிந்த பிறகும் கரோனா களத்தில் பணிபுரிந்த அந்த செவிலிக்கு பழனிசாமி அரசு செலுத்தும் நன்றிக்கடன் இதுதானா? இன்னொரு பக்கம், சென்னையின் நிலைமை கவலைக்கிடமாகிக்கொண்டே போகிறது.

இதிலெல்லாம் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஊடகங்களிடம் வீராவேசமாகவும், உருக்கமாகவும் வசனங்கள் பேசுவது மட்டுமே போதுமென்று முதலமைச்சரும், சுகாதாரத் துறை அமைச்சரும் நினைக்கிறார்களா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க: செவிலியர் மரணத்தில் முன்னுக்குப்பின் முரண் - செவிலியர்கள் சங்கம் கடும் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.