சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25) உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான சட்டங்களில் மேலும் திருத்தம் செய்வதற்கான ஒரு சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார்.
ஏற்கெனவே, பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை ஆளுநரே நியமித்து வரும் நிலையில், அந்த அதிகாரத்தை அரசுக்கு மாற்றும் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கே தமிழ்நாடு அரசு அனுப்பி வைக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று (ஏப்.25) நடந்த கழக வளர்ச்சிப் பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கலந்து கொண்டார்.பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
குடியரசு தலைவரே முடிவு எடுக்கவேண்டும்: அப்பொழுது , 'துணைவேந்தர்களை ஆளுநர்கள் நியமனம் செய்யும் முறை உள்ளது. ஆனால் தற்போது திமுக இந்த முடிவை எடுத்து உள்ளது.1999 யில் இருந்து கூட்டணி ஆட்சியில் இருந்த போது செய்யாமல் "திராவிட மாடல்" என்று கூறி தற்பொழுது செய்கிறார்கள். இந்த விவகாரத்தில் குடியரசு தலைவரின் முடிவை பொறுத்தே உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
லாக் அப் மரணம் : சாத்தான்குளத்தில் நடந்ததைப்போல சென்னையில் விக்னேஷ் என்பவர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர், பொதுவாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் பொழுது சில இடங்களில் அவப்பெயர்களை வாங்கிக்கொள்கிறார்கள். காவல்துறை இது மாதிரியான தவறுகள் நடக்காதாவாறு பார்த்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
சங்கர மடத்தின் மடாதிபதி ஜேயந்திரர் சால்வையை தெலுங்கான ஆளுநருக்கு அளித்த விதத்தில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் ஆளுநருக்கே அதில் பிரச்னை இல்லை என்றால் அதில் நான் கூறுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், எனக்கு இறை நம்பிக்கை உள்ளது. நான் சங்கர மடம் சென்றாலும் சால்வையை அப்படித் தான் வாங்கிக்கொள்வேன். எனக்கு அதில் பிரச்னையும் இல்லை என்றார்.
திமுக பெரும்பான்மை: மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசை குறைக் கூறக் கூடாது என தெரிவித்த தினகரன், நாடாளுமன்றத்திலும் திமுக பெரும்பான்மை பெற்று உள்ளது, சட்டமன்றதிலும் மக்கள் அதிக பொறுப்பை வழங்கி உள்ளனர். அதை உணர்ந்து மின்வெட்டு பிரச்னையை சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமமுக போட்டி மக்களை சந்திப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்!