ETV Bharat / city

முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்? - நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், திருச்சி அதிமுகவில் மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து கோஷ்டி மோதல் நடைபெற்றுவருகிறது. இது குறித்து இந்தச் செய்தித் தொகுப்பில் காணலாம்.

அதிமுக மேயர் வேட்பாளர் யார்
அதிமுக மேயர் வேட்பாளர் யார்
author img

By

Published : Jan 15, 2022, 7:30 PM IST

திருச்சி: நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை அதிமுகவால். அதுவும் குறிப்பாக ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக கோட்டை என்பார்கள்; அங்கேயே விழுந்தது ஓட்டை, காரணம் கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லாததும் - தடி எடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்கிற மனப்பான்மையில் செயல்பட்டதாலும்தான் என்கிறார்கள் பழம்தின்று கொட்டைபோட்டவர்கள்.

திமுகவோ அதிமுகவோ ஸ்ரீரங்கம் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சீட்டு என்பது எம்ஜிஆர் காலத்துக்குப் பின்னால் வந்த விதி. திமுகவைப் பொறுத்தவரை சில காலம் கூட்டணி கட்சியினர் தலையில் கட்டிவிடுவார்கள், ஆனால் கடந்த இரண்டு மூன்று முறையாக திமுகவே நேரடியாகக் களம்கண்டது.

ரத்தத்தின் ரத்தங்கள் ஆதங்கம்!

கடைசி முறையாக 2021 தேர்தலில் வெற்றி வாகையும் சூடியது. அதற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்பட்டது - மாவட்டத்தில் அப்போதைய இரண்டு அமைச்சர்கள் (வெல்லமண்டி நடராஜன், வளர்மதி) இருந்தும் தங்களை வலப்படுத்திக்கொண்டு தொண்டர்களைக் கவனிக்காமல் விட்டது என்கிறார்கள். 'அள்ளிக் கொடுக்க வேண்டாம்; கிள்ளியாவது கொடுத்திருக்கலாம் இல்ல' என்பது ரத்தத்தின் ரத்தங்களின் ஆதங்கம்!

சரி இம்முறை அதிமுக சார்பாக யார் மேயராக வர வாய்ப்பு என ரத்தத்தின் ரத்தங்களிடம் ரசா பாசம் இல்லாத கேள்வியை முன்வைத்தோம். காதில் விழுந்தவை நமது வாசகர்களுக்கு… திருச்சி மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து மாநகர், வடக்கு, தெற்கு எனக் கணக்கில் வைத்துள்ளனர்.

இதில் தெற்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்பி குமார் உள்ளார், வடக்கு மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியும், மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் உள்ளனர். இதில் தெற்கு மாவட்டத்தில் 13 மாமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாவட்டத்தில் ஏழு மாமன்ற உறுப்பினர்களும், மாநகருக்குள் 45 மாமன்ற உறுப்பினர்களும் அடங்கிவிடுகிறார்கள்.

அதிமுக மேயர் வேட்பாளர் யார்
அதிமுக மேயர் வேட்பாளர் யார்

அதிமுக அசரவைக்குமா, அசந்துபோகுமா?

அதிக மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாமன்ற உறுப்பினர்களுக்குச் சீட் கொடுக்கும் அதிகாரமும் கட்டுப்படுத்தும் அதிகாரமும் வெல்லமண்டி நடராஜனையே சார்ந்திருக்கிறது. அவர் தனது மகன் ஜவஹரை எப்படியாவது மேயராக்க வேண்டும் எனத் தீவிரமாகக் காயை நகர்த்திவருகிறாராம். மற்றொருவர் கார்த்திகேயன் மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர், ஆவின் முன்னாள் சேர்மன், இவர் எடப்பாடி வீட்டின் கிச்சன் கேபினட்.

இவரும் களத்தில் குதிக்க இருக்கிறார். யாருடைய அணியும் இல்லாமல் முதலமைச்சரின் அணி என்பது இவருக்குக் கூடுதல் பலம். அதேபோல முன்னாள் மாமன்ற துணை மேயர் சீனிவாசன் இம்முறை மேயர் ஆகிவிட வேண்டும் என்பதற்காகவே அமமுகவிலிருந்து விலகி தாய்க் கழகமான அதிமுகவிற்கு வந்துவிட்டார்.

அதிமுக மேயர் வேட்பாளர் யார்
அதிமுக மேயர் வேட்பாளர் யார்

ஆக களத்தில் மூன்று பேர் போட்டியில் இருக்கிறார்கள். முதலில் இவர்கள் ஆளும் கட்சியின் அதிகாரபலம், பணபலத்தைத் தாண்டி கவுன்சிலர் ஆகட்டும் அதற்குப் பின் மேயர் கனவில் மிதக்கட்டும் என்கிறார்கள் விவரமானவர்கள். தேர்தல் பரப்புரை தொடங்கினால்தான் தெரியும் அதிமுக அசரவைக்குமா அல்லது அசந்துபோகுமா என்பது. அதிமுகவிற்குச் சாதகமாக இருப்பது திமுக 2021 சட்டப்பேரவையில் சொன்னதைச் செய்யவில்லை என்பது மட்டும்தான்... முடிவுக்காகக் காத்திருப்போமே!

இதையும் படிங்க: பொங்கல் தொகுப்பு கரும்பில் முறைகேடு? - அரசு கவனிக்குமா...!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.