சென்னை : தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகளால் நோய்த் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கிடையே பொது பேருந்துப் போக்குவரத்தை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்துக் கழக, மத்தியப் பணிமனையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார்.
அந்தவகையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே, பொதுப் பேருந்து 50 சதவிகித இருக்கைகளுடன் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
காலை 9 மணி வரை, 1,792 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 925 சாதாரணப் கட்டணப் பேருந்துகளும், 30 விரைவுப் பேருந்துகளும், 30 சிறிய பேருந்துகளும், 807 சொகுசுப் பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்குத் தேவையான பேருந்துகளை உரிய நேரத்தில் இயக்க இரண்டு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களோடு அதிக தொடர்புடைய நடத்துநர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தவறாது தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த 85 விழுக்காடு பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அனைத்துப் பெண்களும் சாதரணக் கட்டணப் பேருந்துகளில், கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் மற்றும் திருநங்கைகள் (மூன்றாம் பாலினத்தவர்) ஆகியோர் சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், இன்று முதல், கட்டணமின்றி பயணம் செய்யலாம்.
அவ்வாறு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட ஏதுவாக, அவர்களுக்கு கட்டணமில்லா பயணச் சீட்டு வரும் 23 ந் தேதி முதல், மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படுகிறது.
பிற போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகள் இயக்கம் தொடங்கிய பின்னர் வழங்கப்படும்.பேருந்துகள் அனைத்தும், அரசு விதித்துள்ள நோய்தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பயணிகள் 50 சதவிகித இருக்ககைளில் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய அனுதிக்கப்படுவர்.பயணிகள் அனைவரும் கட்டயாம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், பேருந்தினை இயக்குகின்ற ஓட்டுநரும், நடத்துநரும் உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்" என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
இதையும் படிங்க : 'பெரியாரின் சமூகநீதியின்படி அரசு இயங்கும்' - ஆளுநர்