சென்னை: சட்டபேரவை உறுப்பினர் செல்லூர் ராஜூ சட்டப் பேரவையில் பேசியபோது, "ரொம்ப நன்றி. கோடான கோடி நன்றி பேரவைத் தலைவர் அவர்களே - இத்தனை நாளாக கேட்டு இன்று தான் அனுமதி கொடுத்திருக்கீங்க," என்றவுடன் பேரவையில் சிரிப்பு அலை எழுந்தது.
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, இலவசப் பேருந்து பயணம் என்ற உடன் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ஆனால், குறிப்பிட்ட பேருந்துகள் என்று தான் சொல்கிறார்கள். உரிய நேரத்தில் போக முடியவில்லை. மதுரை மாநகரில் குறிப்பிட்ட பேருந்துகளில் தான் இலவசம் என்று தான் பெண்கள் சிரமப்படுகிறார்கள். பெண்களின் குரலாக நான் ஒலிக்கிறேன். மதுரை மாநகரில் எல்லா பேருந்துகளும் இலவசம் என்றால் பரவாயில்லை.
மகளிர் பஸ் என்று இலவசப் பேருந்தை கூறுகிறார்கள். மற்றப் பேருந்தில் அவர்கள் ஏறுவதில்லை’ என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் போக்குவரத்துத்துறை ராஜகண்ணப்பன், 'மகளிருக்கு நகரப்பேருந்துகளில் இலவசப் பயணம் என்பது முதலமைச்சரின் கனவுத் திட்டம். அது மிக வெற்றிகரமாக செயல்படுகிறது.
மேலும் எல்லா பேருந்துகளிலும் என்றால் எப்படி பஸ் கம்பெனி-யை நடத்துவது. ஏற்கெனவே 48 ஆயிரம் கோடி நஷ்டத்துல உள்ளது. மக்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். ஆனால், நம்ம உறுப்பினர் ராஜு தான் சந்தோசமாக இல்லை போல' எனக் குறிப்பிடப்பட்டார்.
இதையும் படிங்க: 'ஒரே ஆண்டிற்குள் நிதிப்பற்றாக்குறை தொகையைக் குறைத்துள்ளோம்' - நிதியமைச்சர்