ETV Bharat / city

கரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு - தெற்கு ரயில்வே

கரோனா தொற்றால் நிறுத்தப்பட்டிருந்த பல்வேறு ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்.15 முதல் இயக்கப்பட உள்ளது.

தெற்கு ரயில்வே
தெற்கு ரயில்வே
author img

By

Published : Apr 6, 2022, 6:43 AM IST

Updated : Apr 6, 2022, 8:42 AM IST

மதுரை: கரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் ஏப்.15 முதல் இயக்கப்பட உள்ளது. எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (12689) சென்னையிலிருந்து ஏப்.15 முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

நிறுத்துமிடங்கள்: மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வாராந்திர சேவை விரைவு ரயில் (12690) நாகர்கோவிலில் இருந்து ஏப்.17 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 07.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்று சேரும். நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், மொரப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை செல்லும் விரைவு ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தில் நிற்காது. கூடுதலாக பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 ரயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோடை விடுமுறையையொட்டி தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

Last Updated : Apr 6, 2022, 8:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.