சென்னை பரங்கிமலையில் அமைந்துள்ள இந்தியா ராணுவம் பயிற்சி மைதானத்தில் ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவத்தை சேர்ந்த பெண் அலுவலர்கள் ஜனவரி 18 ஆம் தேதி முதல் இந்தியா ராணுவத்தினரிடம் பயிற்சிகள் பெற்று வருகின்றனர்.
வருடம் வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் 2020ஆம் ஆண்டு கரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து 4ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த பயிற்சியில் 20 ஆப்கானிஸ்தான் தேசிய ராணுவ அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ள வீரர்கள் இரண்டு முதல் ஏழு ஆண்டுகள் வரை வானொலி தொடர்பு, தளவாடங்கள், மனித வளம், மருத்துவ துறைகளில் அனுபவிமிக்கவர்கள். இவர்களுக்கு தற்போது உடற்பயிற்சி, ட்ரில், ஆயுத பயிற்சி, ராணுவ தந்திரங்கள், தலைமை பண்பு, ஆங்கில தொடர்பு திறன் போன்றவையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தியாவில் சென்னை ராணுவ பயிற்சி மைதானத்தில் மட்டுமே பெண்களுக்கு தனியாக பயிற்சி அளிப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணவன் மறைவிற்குப் பின் ராணுவத்தில் இணையவுள்ள பெண்