ETV Bharat / city

எலியை துரத்தி சென்றபோது கதவில் மோதி பெண் உயிரிழப்பு

பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூரில் எலியை அடிக்க துரத்தி சென்ற பெண் வீட்டின் இரும்புக் கதவில் மோதி இடத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் உயிரிழந்தார்
பெண் உயிரிழந்தார்
author img

By

Published : Jun 19, 2022, 9:56 AM IST

Updated : Jun 19, 2022, 10:18 AM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், மகாலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (43). இவரது மனைவி லட்சுமி (36). செந்தில் சரக்கு வாகன ஓட்டுநராக பணிப்புரிந்து வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில், அவரின் வீட்டில் எலிகள் தொல்லை அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (ஜூன் 18) மாலை வீட்டில் ஒரு எலி வருவதைப் பார்த்ததும் அதை அடிப்பதற்காக லட்சுமி, வீட்டில் இருந்த கட்டை ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு, எலியை துரத்தியுள்ளார். அப்போது எலி வேகமாக ஓடியுள்ளது.

எலியை துரத்திய பெண் பரிதாபமாக உயிரிழந்த சோகம்

இதனால், லட்சுமியும் எலியை வேகமாக துரத்திச் சென்றபோது வீட்டில் இருந்த இரும்பு கதவில் மோதி சட்டென மயங்கி விழுந்தார். அவருக்கு தலையில் பலமாக காயம் ஏற்பட்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லட்சுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சங்கர் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் 45 சவரன் நகை திருட்டு - அதிமுகவை சேர்ந்த இருவர் கைது

Last Updated : Jun 19, 2022, 10:18 AM IST

For All Latest Updates

TAGGED:

A Woman Dead
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.