சென்னை: நேபாளத்தைச் சேர்ந்த சக்ரா என்பவர் வடபழனி பூக்காரத் தெருவில் வாடகை வீட்டில் இருந்தபடி, தனியார் நிறுவனம் ஒன்றில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு மஞ்சு(23) என்ற மனைவியும் ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இவர் அவ்வப்போது குடிபோதையில் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுநீரகப் பிரச்சனைக்காக மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ள மனைவி மஞ்சுவின் தாயாரை சென்று கவனித்துகொள்வது தொடர்பாக, இவருக்கும் இவரது மனைவி மஞ்சுவிற்கும் இடையே தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று (அக்.16) கணவர் சக்ரா பணிக்கு சென்ற நிலையில், வீட்டில் மஞ்சு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது குழந்தையின் அழுகை சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து இது குறித்து வீட்டின் உரிமையாளர் கருப்பழகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு