ETV Bharat / city

தமிழ்நாட்டில் 500ஆக குறைந்த கரோனா - total covid cases in chennai

தமிழ்நாட்டில் இன்று(பிப்.25) 507 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 500ஆக குறைந்த கரோனா
தமிழ்நாட்டில் 500ஆக குறைந்த கரோனா
author img

By

Published : Feb 25, 2022, 8:31 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் இன்று 507 கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 1,794 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மூன்று பேர் உயிரிழந்தனர். அதன்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 48 ஆயிரத்து 88 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்து 1 ஆயிரத்து 938ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 65 ஆயிரத்து 768 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மொத்தமாக 6 கோடியே 30 லட்சத்து 46 ஆயிரத்து 52 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 133 பேருக்கும், கோயம்புத்தூரில் 76 பேருக்கும், செங்கல்பட்டில் 58 பேருக்கும், ஈரோட்டில் 22 பேருக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 575 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.