ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM - breaking news

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

3 மணி செய்திச்சுருக்கம்
3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Oct 31, 2021, 3:25 PM IST

1.ரஜினிகாந்த் உடல்நிலை: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

2.குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு இன்று முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

3.அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

4.கோர விபத்து: பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து 11 பேர் பலி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 11 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

5.'படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா' - வைரமுத்து உருக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் வேண்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

6.'உலக நாடுகளுக்கு உதவ அடுத்த ஆண்டுக்குள் 500 கோடி தடுப்பூசிகள்' - பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு உதவுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7.புதுச்சேரியில் திரையரங்கில் 100 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி

புதுச்சேரியில் திரையரங்குகள் 100 விழுக்காடு பார்வையாளர்களுடன் இயங்க அனுமதியளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

8.குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த கொடூர தந்தை!

தன் ஏழு வயது பெண் குழந்தையின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த தந்தையை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

9.'அப்பு எழுந்து வா, மீண்டு வா' - கண்ணீர் கடலில் ரசிகர்கள்!

ஸ்டேடியத்தில் வைப்பதற்காக புனித் ராஜ்குமாரின் உடலை எடுத்துச் சென்ற போது சாலையில் இருபுறமும் குவிந்த ரசிகர்கள் “அப்பு எழுந்து வா, மீண்டு வா” என கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

10.தேவர் ஜெயந்தியை புறக்கணித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்... மற்றொரு பிளவை நோக்கி நகர்கிறதா அதிமுக?

தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர். ஆனால் சசிகலா கலந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அதிமுக மற்றொரு பிளவுக்குத் தயாராகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.