ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Sep 8, 2021, 7:02 AM IST

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

1.10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

2.கேரளத்தில் ஊரடங்கு ரத்து.. கல்லூரிகள் அக்.4 திறப்பு!

கேரளத்தில் கல்லூரிகள் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி திறக்கப்படும் என அம்மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

3.தாலிபான்களுடன் பேசும் பாஜக, விவசாயிகளிடத்தில் பேச மறுப்பதேன்- காங்கிரஸ்!

தாலிபான்களுடன் பேசும் உதடுகள், விவசாயிகளிடத்தில் பேசாது என பாஜக அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

4. ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்த மாணவர்கள்

திருவள்ளூரில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள், தங்களது ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்தனர்.

5.பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயிலில் மோசடி - பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

பழனி மலைக்கோயிலுக்கு செல்லும் மின் இழுவை ரயில் நிலையத்தில் நடக்கும் மோசடியை கண்டித்து பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

6. சென்னையில் அதிநவீன சைபர் ஆய்வகம் விரைவில்!

ஆன்லைன் மோசடிகளில் ஈடுபடுவோர்களை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் சைபர் ஆய்வகம் சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளது.

7.சொத்துத் தகராறு - அண்ணனை காரில் கடத்திய தங்கை கைது

சொத்துத் தகராறு காரணமாக சொந்த அண்ணனையே கடத்திச் சென்ற அதிமுக பெண் பிரமுகர், கல்லூரி மாணவர்கள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. ரூட்டு தலைகளுக்கு காவல் துறை அறிவுரை

சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் காவல் துறையினர் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

9. ராய் லக்‌ஷ்மியின் ‘சிண்ட்ரெல்லா’ வருகிறாள்!

த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகள் பலரிடமும் இயக்குநர் இந்தக் கதையை சொன்னதாக கூறப்படுகிறது.

10. 7ஆவது முறை கூட்டணி அமைக்கும் ஸ்டுடியோ கிரீன் - திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்

பெரும் பொருட்செலவில் தயாராகவுள்ள இந்த திரைப்படம் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்று படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.