ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம்.

நண்பகல் 1 மணி
நண்பகல் 1 மணி
author img

By

Published : Feb 3, 2021, 1:03 PM IST

  1. சூரப்பா மீதான விசாரணைக் குழுவிற்கு காலநீட்டிப்பு கேட்கத் திட்டம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் கால நீட்டிப்பு அரசிடம் கோருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

2. 'எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்த்தவர்' - அண்ணாவிற்கு கமல் புகழாரம்!

பேரறிஞர் அண்ணா எவ்வகைத் திணிப்பையும் ஆற்றலோடு எதிர்கொண்டவர் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

3. வேகமாக வந்த பயணி... உடைந்த கண்ணாடி கதவு!

சென்னை: விமான நிலையத்தின் சா்வதேச முனையத்தில் பயணிகள் வருகை பகுதியில் உள்ள கண்ணாடி கதவு இன்று (பிப். 3) காலை உடைந்து நொறுங்கியது.

4. கரோனா தடுப்பூசியால் உயிரிழந்த கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்? உறவினர்கள் போராட்டம்

விருதுநகர்: அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வலிப்பு வந்து மயங்கிவிழுந்து உயிரிழந்த தற்காலிக முன்களப் பணியாளர் கரோனா தடுப்பு ஊசியினால்தான் இறந்திருக்கிறார் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையில் முற்றுகையில் ஈடுபட்டனர்.

5. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் தருகிறது - விக்கிரமராஜா

மதுரை: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த வணிகர்களை ஏமாற்றியிருக்கிறது எனத் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

6. கலப்பட மருத்துவ முறையைத் திரும்பப் பெறாவிட்டால்...! எச்சரிக்கும் மருத்துவ சங்கம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள கலப்பட மருத்துவ முறையை வரும் 14ஆம் தேதிக்குள் திரும்பப் பெறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவது குறித்து செயற்குழு கூடி முடிவு எடுத்து அறிவிக்கும் என இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

6. கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்: தேடும் பணி தீவிரம்!

திருவள்ளூர்: கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் மாயமானதையடுத்து அவரைத் தேடும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

8. தேனியில் அடிப்படை வசதிகளைச் செய்து தராத பேரூராட்சியைக் கண்டித்துப் போராட்டம்!

தேனி: பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகளைச் செய்து தராத பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அலுவலகத்திற்குப் பூட்டுப்போடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

9. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதுவது யார்?

தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் ரத்துசெய்யப்பட்டதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பைத் தவறவிட்டது.

10. 'அமேசான் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகுகிறேன்' - ஜெஃப் பெசோஸ் திடீர் முடிவின் காரணம் என்ன?

அமேசானின் தலைமைச் செயல் அலுவலர் பதவிலியிருந்து ஜெஃப் பேசோஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.