ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 9AM - இன்றாய முக்கிய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 29, 2021, 9:12 AM IST

1. சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆகஸ்ட் 4ஆம் தேதி ஒத்திவைப்பு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணை ஆகஸ்டு 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2. சென்னையில் 7716 மெட்ரிக் டன் ஆகாயத் தாமரைகள் அகற்றம்

ஜூன் மாதம் முதல் நேற்று (ஜூலை 28) வரை 7716 மெட்ரிக் டன் வண்டல்கள் மற்றும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

3. கந்து வட்டி கொடுமை - 10 பேர் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி வசூலிப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 10க்கும் மேற்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றனர்.

4. சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

உடல்நலக் குறைவு காரணமாக 5 நாள்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா, சிகிச்சை முடிந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

5. சமூக நலத்துறையில் உதவி இயக்குநர் பணிக்கு நேர்காணல்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட துறையில் உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

6. இரண்டாம் தலைமுறை நடத்தும் தேநீர் கடை

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் கல்வி நிறுவனம் ஒன்றுக்கு வெளியே 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஒரு தேநீர் கடை. சுர்ஜித் சிங் மற்றும் சுக்தேவ் சிங் ஆகிய இரு சகோதரர்களால், வேளாண் பல்கலைக்கழகத்திற்கு வெளியே சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது இந்த தேநீர் கடை. தற்போது அந்தத் தேநீர் கடை இரண்டாம் தலைமுறையினரால் நடத்தப்படுகிறது.

7. சர்வதேச புலிகள் தினம் - வளமான காடுகளை உருவாக்கும் புலிகளை காப்போம்

சர்வதேச புலிகள் தினமான இன்று (ஜூலை 29) புலிகள் பாதுகாப்பை உறுதி செய்வது, புலிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் அவசியத்தை பற்றி இத்தொகுப்பு விவரிக்கிறது.

8. Tokyo Olympics: இந்தியாவிடம் வீழ்ந்த அர்ஜென்டினா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் இந்தியா அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

9. Tokyo Olympics: வில்வித்தை அதானு தாஸ் முன்னேற்றம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் வில்வித்தை போட்டியில் நாக்அவுட் முதல் சுற்றில் சீன வீரரை வீழ்த்தி முன்னேறினார் அதானு தாஸ்.

10. அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய யாஷிகா

நடிகை யாஷிகா ஆனந்த் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது முதல் தகவல் அறிக்கை மூலம் உறுதியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.