ETV Bharat / city

காலை 9 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச்சுருக்கம்..

author img

By

Published : Jul 26, 2021, 9:06 AM IST

காலை 9 மணி செய்திச்சுருக்கம்
காலை 9 மணி செய்திச்சுருக்கம்

1. ஆலமரத்துக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்

மதுரை மாவட்டம் செல்லூர் அருகே 102 ஆண்டு பழமையான ஆலமரத்துக்கு மக்கள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

2. பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்

சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி பயிற்சி மருத்துவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3. பிஇ, பிடெக் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் துவங்கியது

பிஇ, பிடெக் ஆகிய பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.

4. மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மறைவு..!

மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் முதுமை காரணமாக நேற்றிரவு (ஜூலை 25) இயற்கை எய்தினார். இன்று (ஜூலை 26) மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெற உள்ளன.

5. போலி நிருபர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் பணம் பறிப்பில் ஈடுபட்ட போலி நிருபர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

6. ஆகஸ்ட் 15 விவசாயிகள் டிராக்டர் பேரணி!

இந்திய நாட்டின் விடுதலை தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி விவசாயிகள் மீண்டும் டிராக்டர் பேரணிக்கு தயாராகிவருகின்றனர்.

7. விஸ்தாரா நோக்கம், தென்மாநிலங்கள் புறக்கணிப்பு- கார்த்தி ப சிதம்பரம்!

விஸ்தாரா திட்டம் நடைபெற்றுவரும் நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரி கூறியுள்ளார். இதற்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளித்துள்ளார்.

8. Tokyo Olympics: சரத் கமல் மூன்றாவது சுற்றுக்கு தகுதி

தமிழ்நாட்டு வீரர் சரத் கமல், டேபிஸ் டென்னிஸ் போட்டியில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

9. விஜய்க்கு சிலை வைத்த ரசிகர்கள்!

விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் விஜய்க்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

10. மூக்கால் ஓவியம் வரைந்த ரசிகர் - சூர்யா நெகிழ்ச்சி!

தனது உருவப் படத்தை மூக்கால் வரைந்த ரசிகருக்கு நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.