ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-9am
top-10-news-at-9am
author img

By

Published : Sep 22, 2020, 9:06 AM IST

தானே கட்டட விபத்து: இதுவரை 18 பேர் சடலமாக மீட்பு

மும்பை(மகாராஷ்டிரா): பிவாண்டியிலுள்ள பட்டேல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் பெருமழை காரணமாக நேற்று (செப்.21) அதிகாலையில் இடிந்து விழுந்தது. அதில் சிக்கி இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

’இது மைல்கல் கல்ல, விவசாயிகளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டப்பட்ட கல்!’ - யோகேந்திர யாதவ்

”பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுவதுபோல் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம் மைல் கல் அல்ல, மாறாக விவசாயிகளின் கழுத்தைச் சுற்றி இறுகக் கட்டப்பட்டுள்ள கல்” என ஸ்வராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் முதல்முறையாக போர்க்கப்பல்களிலிருந்து ஹெலிகாப்டர்களை இயக்கும் 2 பெண் விமானிகள்

இந்திய கடற்படையில் ஏர்பார்ன் டேக்டீஷியன்ஸ் (Airborne Tacticians) எனும் போர்க்கப்பல்களில் இருந்து ஹெலிகாப்டர்களை இயக்கும் பணியில் முதன்முறையாக இரண்டு பெண் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மராத்தா இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்த மகாராஷ்டிரா அரசு!

மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

காவிரி ஆற்றுப் பகுதிகளில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு

நாமக்கல்: சாய ஆலைக் கழிவுகள் கலந்த நீர், ஓடைகளில் செல்வதாக வெளியான செய்தியின் அடிப்படையில் காவிரி ஆறு, ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தலைமைக் கழகத்தில் ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் திடீர் ஆலோசனை- முற்றுகிறதா ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதல்?

சென்னை : அதிமுக தலைமை கழகத்திற்கு வருகைப் புரிந்த கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியிருப்பது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

50 ஆயிரத்து 44 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: மே 8 ஆம் தேதி முதல் நேற்று (செப்.21) வரை 50 ஆயிரத்து 44 மருத்துவ முகாம்கள் நடைபெற்று உள்ளன என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

5 ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பதவி உயர்வு

சென்னை: கே.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட ஐந்து செயலர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மார்பக புற்றுநோயால் அவதிப்படும் நடிகை - மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு கோரிக்கை

சென்னை: மார்பக புற்றுநோயால் அவதிபட்டு வரும் நடிகை கௌரி, மருத்துவ சிகிச்சைக்காக தனக்கு பன உதவி செய்ய வேண்டி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2020: சஹால் சுழலில் பெங்களூரு அசத்தல் வெற்றி!

ஐபிஎல் தொடரின் 3ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அசத்தல் வெற்றி பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.