1. புதிய ஆளுநரை வரவேற்று மு.க. ஸ்டாலின் ட்வீட்
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவியை வரவேற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2. விநாயகர் சதுர்த்தி - பாதுகாப்புப் பணியில் 20,000 போலீசார்
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாகச் சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
3. HBD ஜெயம் ரவி - தனி ஒருவனாய் போர்க்களம் கண்ட மாவீரன்
கடின உழைப்பால் திரைத் துறையில் நட்சத்திரமாக மின்னும் ஜெயம் ரவிக்கு இன்று (செப். 10) தனது 41ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
4. தமிழ்நாடு முழுவதும் 40,000 கரோனா தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.
5. வருமான வரி தாக்கல் அறிக்கைகளுக்கான கடைசி தேதிகள் நீட்டிப்பு
வருமான வரி தாக்கல், பல்வேறு தணிக்கை அறிக்கைகளுக்கான கடைசி தேதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.
6. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: எவைக்கு அனுமதி
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கை அக்டோபர் 31ஆம் தேதிவரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், அரசியல், சமுதாய, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
7. தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி உலகம் முழுவதும் பயணம் - மு.க. ஸ்டாலின்
கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தை பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியா, தாய்லாந்து மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி உலகெங்கும் பயணம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.
8. உடலின் கெட்ட கொழுப்பை குறைக்கும் வால்நட்ஸ்
தினமும் வால்நட்ஸ் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறையும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சில ஆய்வுகளும் வால்நட்ஸ் இதய நோய்களை தடுக்கும் வல்லமை கொண்டது என்று தெளிவுப்படுத்தி இருக்கிறது.
9. ’பொருளாதார முன்னோடியாக பிரிக்ஸ் அமைப்பு உருவெடுக்கும்’ - பிரதமர் மோடி
வருங்காலத்தில் உலகின் பொருளாதார முன்னோடியாக பிரிக்ஸ் அமைப்பு விளங்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
10. சிங்கத்தை அடுத்து ’யானை’... மச்சான் அருண் விஜயை வைத்து முதல் படம் இயக்கும் ஹரி!
இயக்குநர் ஹரி, நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘யானை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.