ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 7PM

author img

By

Published : Aug 16, 2021, 7:50 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச்சுருக்கம்...

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்

1. பணி நிரந்தரம் செய்க: எம்ஆர்பி செவிலியர் ஆர்ப்பாட்டம்

எம்ஆர்பி தேர்வு மூலம் ஒப்பந்தம் அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

2. திமுகவிடம் பணம் வாங்கி 'சார்பட்டா பரம்பரை' எடுக்கப்பட்டுள்ளது: முன்னாள் அமைச்சர் கடும்தாக்கு

திமுகவிடம் பணம் வாங்கி 'சார்பட்டா பரம்பரை' படம் எடுக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆரை அவமதிக்கும் செயலை அதிமுக ஒருபோதும் ஏற்காது. குத்துச்சண்டைக்கும், திமுகவுக்கும் சம்பந்தம் கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

3. தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கை..!

தனியார் பள்ளிகளில் சேர, ஆர்டிஇ (RIGHT TO EDUCATION) சட்டத்தின் கீழ், 82 ஆயிரத்து 766 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

4. பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கல்வித்துறை ஆலோசனை

தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மாணவர்களை சுழற்சி முறையில் வரவைப்பது உள்ளிட்டவை குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார்.

5. பெருநிறுவனங்களிடம் நரேந்திர மோடி அரசாங்கம் சரண்- மார்க்சிஸ்ட்

பெருநிறுவனங்களிடம் நரேந்திர மோடி அரசாங்கம் சரணடைந்துவிட்டது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றஞ்சாட்டியுள்ளது.

6. பிரிவினையின் முதல் கட்டுரையை வெளியிட்டவர் வீர சாவர்க்கர் - நரேந்திர மோடிக்கு திக்விஜய் சிங் பதிலடி!

பிரிவினை தொடர்பான முதல் கட்டுரையை வெளியிட்டவர் வீர சாவர்க்கர் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக் விஜய் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

7. விமானத்தில் தொங்கியபடி சென்ற மூவர்; நடுவானில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு!

ஆப்கானில் இருந்து விமானத்தில் தொங்கியபடி தப்பிக்க முயன்ற மூவர் நடுவானில் இருந்து, கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர்.

8. Malaysian PM resigns: பதவியை ராஜினாமா செய்த மலேசியப் பிரதமர்

பெரும்பான்மையை மக்களவையில் நிரூபிக்க முடியாததை ஒப்புக்கொண்டு மலேசியப் பிரதமர் முகைதின் யாசின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

9. ஆப்கான் வீரர்கள் ரஷித் கான், முகமது நபி ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்களா?

ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கான், முகமது நபி ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பார்கள் என்றும்; ஆனால் இதுவரை அவர்களிடம் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தெரிவித்துள்ளது.

10. தமன்னாவுடன் இணையும் ஜெனிலியாவின் கணவர்..!

நடிகை தமன்னாவும், ஜெனிலியாவின் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்கும் இணைந்து நெட்பிளிக்ஸ் உருவாக்கும் படத்தில் நடிக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.