ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

author img

By

Published : Oct 11, 2021, 7:05 PM IST

1.ரூ.1 கோடி மதிப்புள்ள நிலங்களைப் பொது ஊருணிக்குத் தானமாக கொடுத்த குடும்பங்கள்

சிவகங்கை அருகே நீண்ட நாள் குடிநீர் பிரச்னையைத் தீர்க்கும் பொருட்டு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்து, ஊருக்குப் பொதுவாக ஊருணி உருவாக்க தானமாகக் கொடுத்துள்ளனர்.

2.ஆயுத பூஜை - சென்னையில் போக்குவரத்து மாற்றம்

ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்து இயக்கப்பட உள்ளதால் நெரிசல் ஏற்படாமல் இருக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

3.பயங்கர ஆயுதங்களுடன் இருதரப்பினர் மோதல் - சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை

சென்னை ஆர்.கே. நகரில் முன்விரோதம் காரணமாக கத்தி, உருட்டுக் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4.தமிழ்நாட்டில் நாளை 1250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்- மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் மாநிலம் தழுவிய அளவில் 1,250 மருத்துவ முகாம்கள் நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்தார்.

5.திருச்சியில் பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு வேண்டும் - மனு அளித்த ஜல்லிக்கட்டுப்பேரவை நிர்வாகிகள்

பாரம்பரிய முறையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் கோரி திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் உள்ளிட்டோர் மனு அளித்துள்ளனர்.

6.பாம்பை விட்டு மனைவிக் கொடூர கொலை.. நீதிமன்றம் தீர்ப்பு...

கேரளாவில் பாம்பை பயன்படுத்தி மனைவியைக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் கணவன் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

7.'நாங்க இமயமலை, அவங்க பரங்கிமலை' - சீமானை சீண்டும் ஜெயக்குமார்

பெருவாரியான வாக்குகள் பெற்று அதிமுக இமயமலை போன்று உள்ளது. அதை பரங்கிமலை போன்றவர்கள் கருத்து தெரிவிப்பது 2021 ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சீமானை விமர்சித்து பேசியுள்ளார்.

8.தோனியின் வெறித்தனமான ரசிகர் கோலி செய்த செயல்... என்ன தெரியுமா?

டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், அதிரடியாக ஆடிய தோனியின் ஆட்டத்தைப் பாராட்டி கோலி போட்ட இரண்டு ட்வீட்டுக்கள் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

9.அதிருப்தியுடன் நிறைவடைந்த இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை

இரு தரப்பு பேச்சுவார்த்தையின்போது சீனாவின் தரப்பு முரண்டு பிடித்ததன் காரணமாக இந்தியா - சீனா ராணுவப் பேச்சுவார்த்தை அதிருப்தியில் நிறைவடைந்தது.

10.காட்டுப்பகுதியில் பதுங்கிய கொள்ளையர்கள் - ட்ரோன் கேமராக்களை வைத்து மடக்கிப்பிடித்து என்கவுன்ட்டர் செய்த போலீஸார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே செயின் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையனை காவல் துறையினர் என்கவுன்ட்டர் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.