ETV Bharat / city

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
இரவு 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 2, 2021, 7:10 PM IST

1. 'எடப்பாடி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் கொண்டுவரப்பட்டது'

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

2. சென்னையில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் ஏற்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3. விரைந்து செயல்படும் 108 ஆம்புலன்ஸ்!

முன்பு தாமதமாகச் செயல்பட்டுவந்த 108 ஆம்புலன்ஸ், தற்போது விரைந்து செயல்படுவதாக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. குடிபோதையில் ஐடி ஊழியர் செய்த காரியம்: காலை இழந்த காவலாளி

காலைப் பொழுதிலே குடிபோதையில் வாகனத்தைச் செலுத்திய மென்பொருள் நிறுவன ஊழியர், சாலையில் நடந்துசென்ற வணிக வளாக காவலாளி மீது மோதியதில், அவரது கால் துண்டானது. விபத்தில் சிக்கிய காவலாளி உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

5. இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம்

1987ஆம் ஆண்டு நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

6. கூடங்குளம் அணு உலை: பழுது சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடக்கம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை, எரிபொருள் நிரப்பவும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இந்த அணு உலையில் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.

7. ராஜிவ் தண்டனை கைதி ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் விடுப்பு வழங்கக்கோரி வழக்கு

28 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 மாதம் சாதாரண விடுப்பு வழங்கக் கோரிய வழக்கில், மனுதாரரின் மனு குறித்து தமிழ்நாடு உள் துறைச் செயலர் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்திற்கு உள்பட்டு பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

8. மறுபடியும் முதல்ல இருந்தா... இந்தியாவில் புதிய வைரஸ்

இந்தியாவின் வடமாநிலங்களில் பலர் கண்டறியப்படாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

9. கிங் கோலியின் புதிய சாதனை; நிற்காது இந்த ரன் மெஷின்

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், விராட் கோலி, ஆண்டர்சன் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து, புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.

10. மோசடி வழக்கு: காவல் ஆணையருக்கு நன்றி தெரிவித்த ஆர்யா - வழக்கு செல்லும் பாதை என்ன?

தன்னைப் போல் நடித்து பண மோசடியில் ஈடுபட்ட 2 பேரைக் கைது செய்ததையடுத்து, காவல் துறைக்கு நன்றி செலுத்தும்விதமாக நடிகர் ஆர்யா காவல் ஆணையரை நேரில் சந்தித்துப் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.