ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM - etvtamil

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்.

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 25, 2021, 7:04 AM IST

1. ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம் திறப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் உருவப்படத்தை ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டப்பேரவையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார்.

2. பிளீச்சீங் பவுடர் சாப்பிட்ட சிறுமி; சிகிச்சைக்கு உதவிக்கரம் நீட்டிய அமைச்சர் மா.சு

தவறுதலாக பிளீச்சிங் பவுடர் சாப்பிட்டு அதீத எடையிழப்பு, உணவு உண்ண முடியாமை ஆகியவற்றால் தவித்து வந்த குழந்தையின் பெற்றோர் தங்குவதற்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தும் முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

3. ஸ்மார்ட் சிட்டி பணிகள் 2023ல் நிறைவு பெறும் - அமைச்சர் கே.என். நேரு

திருநெல்வேலி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் முழுவதும் வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

4. ஆன்மீக மக்களுக்கு இது பொற்கால ஆட்சி - அமைச்சர் சேகர்பாபு

ஆன்மீக மக்களுக்கு ஒரு பொற்கால ஆட்சியாகவே இந்த திமுக ஆட்சி இருக்கும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

5. மதுரை வந்த ராணுவ வீரரின் உடல்

அசாம் மாநிலத்தில் பணியில் இருந்த போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் கதிர்வேலின் உடல் விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

6. கடமை தவறிய இரு காவலர்கள் இடமாற்றம்!

பேர்ணாம்பட்டு பகுதியில் சூதாட்டம் குறித்து நடவடிக்கை எடுக்க தவறிய பேர்ணாம்பட்டு ஆய்வாளர் மற்றும் எஸ்.பி.தனிப்பிரிவு காவலர் செல்வராஜ் ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து வேலூர் எஸ்.பி செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

7. டோக்கியோ ஒலிம்பிக் 3ஆவது நாள் அட்டவணை: ஏழு போட்டிகளில் இந்திய வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக்கின் 3ஆம் நாளில்(ஜூலை.25) ஏழு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் போட்டியிடவுள்ளனர்.

8. உயிரை குடிக்கும் புதிய பூஞ்சை... அமெரிக்காவில் பதற்ற நிலை!

அமெரிக்காவில் மரணத்தை ஏற்படுத்தும் 'கேண்டிடா ஆரிஸ்' என்கிற கொடிய பூஞ்சை தொற்று பரவி வருகிறது.

9. நயன்தாரா இல்லாமல் விக்னேஷ் சிவனுக்கு இரண்டு காதலாம்...

இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்றிலிருந்து டான்ஸிங் ரோஸை காதலிக்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

10. 'மாரியம்மாவ புரிஞ்சுகிட்டதுக்கு நன்றி' - சார்பட்டா பரம்பரை நடிகை

'சார்பட்டா பரம்பரை' படத்தால் தனக்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து நடிகை துஷாரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.