ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 22, 2021, 7:38 AM IST

1. 'பொறியியல் படிப்பில் சரியான கல்லூரிகளைத் தேர்வு செய்யுங்கள்!'

தமிழ்நாட்டில் சரியான பொறியியல் கல்லூரிகளைத் தேர்வுசெய்து சேர வேண்டுமெனவும், விருப்பமில்லாத பாடப்பிரிவுகளில் அடுத்தவர்களின் வற்புறுத்தலுக்காக சேர வேண்டாமெனவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி அறிவுரை வழங்கியுள்ளார்.

2. இ-சேவை மையங்களில் தவறு நிகழ்ந்தால் அனுமதி ரத்து - வருவாய்த் துறை அமைச்சர்

தவறுகள் நடக்கும் இ-சேவை மையங்களின் அனுமதி ரத்துசெய்யப்படுவதோடு, அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

3. சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தேர்வு தேதி அறிவிப்பு

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புகளுக்கான தனித்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

4. ஓபிசி வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மைச் செயலாளர் கடிதம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசு வழங்கும் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெறும் வகையில் வழங்கப்படும் சாதிச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

5. ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு மதுரை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு? - மாநகராட்சி சுற்றறிக்கையால் சர்ச்சை

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வர இருக்கும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக மாநகராட்சி சார்பாக ஏற்பாடுகள் செய்வது குறித்து வெளியான சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

6. போதும்டா சாமி - வாய்திறந்தது பெகாசஸ் செயலியின் என்எஸ்ஓ குழுமம்

பெகாசஸ் செயலி குறித்து எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஊடகத்தின் அவதூறு பரப்புரை என என்எஸ்ஓ குழுமம் தெரிவித்துள்ளது.

7. பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும்: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: கோவிட் நிலவரம் குறித்த தீவிர கண்காணிப்பிற்குப் பிறகே பள்ளி கல்லூரிகளைப் படிப்படியாக திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

8. 'சார்பட்டா பரம்பரை' - வாக்கு தவறிய அமேசான்

'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே வெளியானதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

9. சிம்பு - கெளதம் மேனன் பட அப்டேட்

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

10. TNPL 2021: திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மலைக்கோட்டை; திருச்சி முதலிடம்

நெல்லை - திருச்சி அணிகளுக்கு இடையேயான டிஎன்பிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், திருச்சி அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.