ETV Bharat / city

காலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM - etvtamil

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்..

காலை 7 மணி செய்திச்சுருக்கம்
காலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 16, 2021, 7:25 AM IST

1. 'மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்..' - அண்ணாமலை பகிரங்க மிரட்டல்

மீடியாவை கண்ட்ரோல் பண்ணுவோம்; கையிலெடுப்போம் என ஊடகங்களுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

2. மதுரையில் மெட்ரோ ரயில் - தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

3. 281 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!

பள்ளிக்கல்வித் துறையின் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர், நூலகர் உள்ளிட்ட 281 பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 15) வழங்கினார்.

4. 'வீட்டிலேயே தடுப்பூசி' சர்ச்சையில் சிக்கிய பிரக்யா தாக்கூர்

வீட்டிலேயே கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா தாக்கூர் கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

5. மேகதாது அணை விவகாரம்... டெல்லி புறப்பாடு ஏன்?

சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டு ஒருமித்த கருத்துகளின் அடிப்படையில் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம் என டெல்லி செல்லும் முன் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி கூறினார்.

6. மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கு துணை நிற்போம்: அண்ணாமலை பேட்டி

மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு அரசு என்ன முடிவு எடுக்கிறதோ... அதற்கு தமிழ்நாடு பாஜக உறுதுனையாக நிற்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

7. குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக குடியரசு தலைவரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துள்ளார்.

8. சொகுசு கார் வரி வழக்கு: நடிகர் விஜய் மேல்முறையீடு?

சொகுசு கார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

9. viral video: பலூன் கேட்ச் - சமந்தாவுடன் சமத்தாக விளையாடும் நாய்..

நடிகை சமந்தா தனது செல்லப்பிராணியுடன் சேர்ந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சமந்தா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைப் பதிவு செய்த ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது.

10. ரம்யா கிருஷ்ணனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வனிதா

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜய்குமார் நேருக்கு நேர் ரம்யா கிருஷ்ணனுடன் மோதிக் கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.