ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM

author img

By

Published : Aug 18, 2021, 5:26 PM IST

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்

1. பள்ளிகள் திறப்பு: 50 விழுக்காடு மாணவர்களுடன் இயங்கலாம்

பள்ளிகள் திறக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

2. எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள் (அதிமுகவினர்). கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

3. நடப்புக் கூட்டத் தொடரிலேயே 'நீட்'டுக்கு எதிரான சட்ட முன்வடிவு - ஸ்டாலின்

நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

4. பாலின பாகுபாடு கூடாது- தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி!

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

5. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு - தலைவர்கள் இரங்கல்

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று (ஆக.18) காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

6. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

7. தாலிபான்களை எதிர்த்து வீதிக்கு வந்த இஸ்லாமியப் பெண்கள்

காபூல் நகரில் தாலிபான்களை எதிர்த்து வீதிக்கு வந்த இஸ்லாமியப் பெண்கள், அவர்களுக்கு எதிராக முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

8. 'கொலிஜியம் பரிந்துரை செய்தி' - ஊடகங்கள் மீது தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி

நீதிபதிகள் நியமனம் தொடர்பான கொலிஜியம் பரிந்துரை குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தி குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

9. கடுமையான காய்ச்சல், தங்க மகனுக்கு கரோனாவா?- மருத்துவமனையில் நீரஜ் சோப்ரா!

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10. நாயகியான பிரபல தொலைக்காட்சி தொடர் வில்லி

தொலைக்காட்சி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.