ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 5 PM - சென்னை

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Sep 3, 2021, 5:03 PM IST

1. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார் எம்.எம். அப்துல்லா

திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட எம்.எம். அப்துல்லா, போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வானார்.

2. கோடநாடு வழக்கில் இபிஎஸ், சசிகலாவை விசாரிக்கக் கோரிய மனு - காவல் துறை பதிலளிக்க உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வி.கே. சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கக் கோரிய வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3. 'கண்ணை இமை காப்பதுபோல் தமிழ்நாட்டை காக்கிறார் ஸ்டாலின்'

தமிழ்நாட்டில் உள்ள டெல்டா மற்றும் மற்ற மாவட்டங்களைக் கண்ணை இமை காப்பதுபோல் முதலமைச்சர் ஸ்டாலின் பாதுகாப்பார் எனச் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் தெரிவித்தார்.

4. சென்னை மெரினா கடற்கரை அழகுப்படுத்தப்படும் - அமைச்சர் மெய்யநாதன்

சென்னை மெரினா கடற்கரை 20 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்படும் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீ. மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

5. 10 மாவட்டங்களில் கனமழை!

தமிழ்நாட்டில் இன்று (செப்.03) 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

6. 58 ஆயிரம் புள்ளிகளை கடந்த சென்செக்ஸ்!

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் 58 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது.

7. தங்கம் விலை நிலவரம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்து விற்பனையாகிறது.

8. சமாஜ்வாதி எம்.பி. மீது தேசத்துரோக வழக்கு!

சமாஜ்வாதி எம்.பி. மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

9. வெண்கலம் வென்றார் அவனி லெகாரா; மேலும் ஒரு வரலாற்று சாதனை

பாரா ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச் சுடுதல் 50 மீட்டர் பிரிவில் இந்தியாவின் அவனி லெகாரா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன், 10 மீட்டர் பிரிவில் லெகாரா தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

10. பிக்பாஸ் 5: ஒரு வேள இருக்குமோ... ட்ரெண்ட் ஆகும் ஜி.பி. முத்து

பிக்பாஸ் 5ஆவது சீசன் போட்டியாளராக ஜி.பி. முத்து பங்கேற்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சதீஷ் அது குறித்த நகைச்சுவையாக ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதலங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.