1. 21 தியாகிகளுக்கு மணிமண்டபம்- ராமதாஸ் வரவேற்பு!
வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்தோருக்கு மணிமண்டபமும், அவர்களது குடும்பத்தினருக்கு கல்வித்தகுதிக்கேற்ப அரசு வேலையும் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்று, பாமக நிறுவனர் மருத்துவர். ராமதாஸ் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
2. சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இந்தியாவிலேயே முதல் முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகாமையில் ஏற்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
3. நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டம் - தமிழ்நாடு அரசு
நீட் தேர்வுக்கு எதிராகப் புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. கருணாநிதிக்குச் சிலை - சர்ச்சையும், கவிதையும்
பணியை ஆரம்பித்தபோது சட்ட ரீதியான சிக்கலை அதிமுக கொடுத்தது. ஆனால், அதனை திராவிடர் கழகம் முறியடித்து 1975 செப்டம்பர் 21 அன்று கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டது.
5. 'எய்ம்ஸ் விவகாரத்தில் என்னதான் செய்தீர்கள்?'
எய்ம்ஸ் மருத்துவமனை குறித்துப் பேச அதிமுக கூச்சப்பட வேண்டும், இந்த விவகாரத்தில் என்னதான் செய்தீர்கள் எனப் பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, துறையின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
6. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ கடல் மீன்கள்
ஒத்தக்கடையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மீன் கடையில் இன்று ஒருநாள் மட்டும் ஒரு கிலோ கடல் மீன்கள், ஒரு ரூபாய்க்கு விற்பனையானது.
7. ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை
இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 35,640 என விற்பனையாகிறது.
8. TOSS: இங்கிலாந்து பந்துவீச்சு; அணிக்கு திரும்பினர் ஷர்துல், உமேஷ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷமி, இஷாந்த் ஆகியோருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
9. இந்தியன் 2 வழக்கு - லைகா நிறுவனம், சங்கர் பேச்சுவார்த்தை
இந்தியன் 2 பட பிரச்சினை தொடர்பாக லைகா நிறுவனமும், இயக்குநர் சங்கரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. பிக்பாஸ் வின்னர் உயிரிழப்பு- பிரபலங்கள் இரங்கல்
பிக்பாஸ் டைட்டில் வின்னர் சித்தார்த் சுக்லா உயிரிழந்தது குறித்து திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.