1. ஒரு வாரம் முன்னதாக முடிவடைகிறது பட்ஜெட் கூட்டத்தொடர்!
மாநிலங்களவை தேர்தல் பணி காரணமாக தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒரு வாரம் முன்னதாக செப்டம்பர் 13ஆம் தேதியே நிறைவுபெறும் என சட்டப்பேரவை அலுவல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
2. தமிழ்நாட்டில் செப். 13இல் தேர்தல்: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்த திமுக!
மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜானின் மறைவைத் தொடர்ந்து, காலியாக உள்ள அந்த இடத்திற்கு செப்டம்பர் 13 அன்று தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
3. பள்ளிகள் திறக்கப்படுமா; இல்லையா? - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பள்ளிகள் திறப்பு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அந்த கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
4. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1,15,785 பேர் பயன்
மக்களைத் தேடி மருந்துவம் திட்டத்தில் இன்று (ஆக.17) காலை வரை 1,15,785 பேர் பயன் அடைந்துள்ளனர்.
5. என்னைச் சந்திக்க வரவேண்டாம், அதுவே எனக்குப் பிறந்தநாள் பரிசு - சசிகலா
கரோனா தொற்றின் தாக்கம் காரணமாகவும், பொது முடக்கம் நீட்டிப்பு காரணமாகவும் தன்னை யாரும் நேரில் சந்திக்க வர வேண்டாம் எனவும், மக்களுக்குச் சேவை செய்வதே எனக்கு நீங்கள் அளிக்கும் பிறந்தநாள் பரிசு எனவும் தொண்டர்களுக்கு வெளியிட்டுள்ள காணொலியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்றைய தினம் (ஆக. 17) சசிகலா தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், இந்தக் காணொலியை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
6. வட மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் ஆகியவற்றின் காரணமாக தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7. தந்தையுடன் சபரிமலை செல்ல சிறுமிக்கு அனுமதி!
சபரிமலை தரிசனத்துக்கு தந்தையுடன் செல்ல 9 வயது சிறுமிக்கு கேரள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
8. ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!
நாட்டில் ஒரே நாளில் 25 ஆயிரம் பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 437 ஆக பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
9. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்கள் சிறுவர்கள் போல் அட்டகாசம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றிய தாலிபன்கள், அங்குள்ள பொழுதுபோக்கு பூங்காவில் கார் ஓட்டுவது, ராட்டினங்களில் ஏறி விளையாடுவது போன்ற அதகளங்களை நிகழ்த்தி வருகின்றனர். அதேபோல், அருகில் உள்ள ஜிம்முக்குள் நுழைந்து தாலிபன்கள் உடற்பயிற்சி செய்யும் காணொலியும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
10. வருமான வரிக்கு வட்டி செலுத்த விலக்குகோரிய விவகாரம்: நடிகர் சூர்யா வழக்கு தள்ளுபடி!
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.