ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் TOP 10 NEWS @ 5 PM - இன்றைய முக்கிய 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
மாலை 5 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 13, 2021, 4:45 PM IST

1. தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுகவினர் பலரும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

2. அனைத்து துறைகளிலும் 'தமிழ் ஆட்சி மொழி'

அனைத்து துறைகளிலும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்த வலியுறுத்தப்படும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

3. பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு - இன்று நள்ளிரவு முதல் அமல்

பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

4. டெல்டா மாவட்டங்களில் மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

5. 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழ்நாட்டிற்கு மேலும் 4 லட்சத்து 80 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

6. கேரளா, மகாராஷ்டிராவில் அதிகரிக்கும் கரோனா - வருகிறதா 3ஆம் அலை!

நாட்டின் மூன்றாம் அலையை ஏற்படுத்தக் கூடிய மாநிலங்களாக கேரளா, மகாராஷ்டிரா அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

7. பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ட்விட்டர்- ராகுல் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்ட நிலையில், ட்விட்டர் நிறுவனம் பக்க சார்பாக செயல்படுவதாகவும், அரசு கூறுவதை அந்நிறுவனம் பின்பற்றுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

8. தைவானுக்கு அமெரிக்கா அழைப்பு- கொந்தளிப்பில் சீனா!

ஜனநாயகத்தின் உச்சி மாநாட்டில் பங்குபெற தைவானை அமெரிக்கா அழைத்தால், தைவானில் இதுவரை காணாத புயல்களை கிளப்புவோம் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

9. தோனி தலைமையில் துபாய்க்கு பறந்த சிஎஸ்கே!

அடுத்த மாதம் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் இன்று (ஆக. 13) தனி விமானம் மூலம் துபாய் புறப்பட்டனர்.

10. ரவுண்டு கட்டி நடிக்கும் விக்ரம்

ஒரே சமயத்தில் மூன்று படங்களில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார் விக்ரம்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.