ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM - ஈடிவி பாரத் தமிழ்நாடு

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 25, 2021, 5:22 PM IST

1. இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியை நடத்த பல்கலை நிர்வாகம் தயக்கம் காட்டுவதாகவும் ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. இதன் விளைவாக, நிகழ்ச்சியை நடத்த பல்கலை நிர்வாகம் இன்று முடிவெடுத்துள்ளது.

2. தேர்தல் அலுவலரை மிரட்டிய விவகாரம்: அதிமுகவை சேர்ந்த 4 பேர் கைது

ஊராட்சி துணைத் தலைவர் மறைமுகத் தேர்தலின்போது தேர்தல் அலுவலரை மிரட்டிய வழக்கில், அதிமுகவை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3. தமிழ்த் திரையுலக மன்னனுக்கு விருது!

நான்கு தசாப்தங்களாக தமிழ்த் திரையுலகை ஆண்டுவரும் ரஜினிகாந்த்திற்கு, தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

4. நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு கரோனா!

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

5. இனிமே இலவசம் - மாணவர்களே என்ஜாய்..!

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

6. அண்ணன் ரஜினிகாந்துக்கு வாழ்த்துகள் - நடிகர் விஜயகாந்த்!

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு நடிகரும், தேமுதிக பொதுச்செயலாருமான விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7. போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தில் முக்கிய மாற்றம் - அரசு பரிந்துரை

தனி நபர்கள் தனது சொந்த பயன்பாட்டிற்காக மிகக்குறைந்தளவிலான போதைப்பொருளை வைத்துக்கொள்வதை கிரிமினல் குற்றமாகக் கருத வேண்டாம் என சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

8. ரூ.15 கோடி கருவூல அலுவலகக் கட்டடங்கள்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கருவூலக் கணக்குத் துறை சார்பில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று மாவட்ட கருவூல அலுவலகக் கட்டடங்கள், நான்கு சார் கருவூல அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்துவைத்தார்.

9. இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் பண்பாளர் ரஜினி - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது வாங்கிய ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடக்கம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.