ETV Bharat / city

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 3 pm

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்..

பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 14, 2021, 3:15 PM IST

1. நடிகை மீரா மிதுன் கைது

நடிகை மீரா மிதுன் கேரளாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

2. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் பணி நியமன ஆணை வழங்கிய முதலமைச்சர்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பணியாளர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

3. அவதூறு வழக்கு: ரத்துசெய்ய கோரும் ஓபிஎஸ்-இபிஎஸ்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி தாக்கல்செய்துள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரியும், வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்கக் கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.

4. ஊட்டச்சத்து குறைபாட்டால் ஒரே மாவட்டத்தில் 49 குழந்தைகள் பலி!

அமராவதி (மகாராஷ்டிரா): ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மெல்காட் பகுதியில் கடந்த மூன்று மாதங்களில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

5. ட்விட்டரில் மீண்டு(ம்) வந்த ராகுல் காந்தியின் கணக்கு!

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி உள்ளிட்ட 22 காங்கிரஸ் தலைவர்களின் கணக்குகள் மீண்டும் செயல்பட ட்விட்டர் நிறுவனம் அனுமதித்துள்ளது.

6. ’ஆக்.14 பிரிவினை நினைவு தினம்’ - பிரதமர் மோடி அறிவிப்பு

தேசப் பிரிவினை துயரங்களை நினைவுகூரும் விதமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி பிரிவினை துயரங்கள் நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7. ஜப்பானில் தொடர் மழை: வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்

ஜப்பான் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தொடர்ந்து பல நாள்களாக மழை பெய்துவருவதால் சுமார் 12 லட்சம் மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

8. கொத்துக் கொத்தாய் வெளியேறும் மக்கள், துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள்...’ - ஆப்கன் குறித்து அண்டோனியோ குட்டெரஸ் கவலை!

ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் உரிமை மீறல்கள் குறித்து ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

9. ENG vs IND LORDS TEST: முடிந்தது இரண்டாம் நாள்; அரை சதத்தை நோக்கி ஜோ ரூட்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 48 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

10. 29 years of சூரியன் - 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'

நடிகர் சரத்குமாரின் திரைப்பயணத்தில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்த சூரியன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் (ஆக. 14) 29 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.